கோலாலம்பூர், டிச. 17-
வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை நோக்கி இம்மாதம் இறுதி வரையில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையான பிளஸ் நெடுஞ்சாலையை நாள் ஒன்றுக்கு 21 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமான நாட்களில் நாள் ஒன்றுக்கு 18 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் பிளஸ் நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றன.
ஆனால், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் வரையில் நெடுஞ்சாலை போக்குவரத்தில் வாகனங்களின் எண்ணிக்கை 14 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த நெடுஞ்சாலை வாரியம் கூறுகிறது.
வரும் டிசம்பர் 20 ஆம் தேதி மு தல் அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரையில் பிளஸ் நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக மிகுதியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.