கோலாலம்பூர், டிச.17-
சபா மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் நியமிக்கப்பட்டுள்ளார். சபா மாநில அம்னோ முன்னாள் தொடர்புக்குழுத் தலைவருமான மூசா அமான், இன்று கோலாலம்பூரில் இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பதவி உறுதிமொழி சடங்கில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடமிருந்து நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
அத்துடன் ஸ்ரீ மஹாராஜா மங்க நெகாரா எனும் உயரிய அந்தஸ்தை தாங்கிய துன் விருதும் மூசா அமானுக்கு வழங்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டார்.
சபா, சுங்கை சிபுகா முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான 73 வயது மூசா அமான், இம்மாதம் இறுதியில் பதவி தவணைக்காலம் முடிவடையவிருக்கும் சபா ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடினுக்கு பதிலாக சபா மாநிலத்தின் முதன்மை பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மூசாவின் பதவி உறுதி மொழி சடங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்