சுபாங்ஜெயா, டிச.17-
கடந்த டிசம்பர் 9 ஆம் தேதியிலிருந்து 14 வயது இந்திய இளம் பெண்ணை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டள்ளதால் அந்தப் பெண்ணை தேடிக் கண்டுப்பிடிப்பதில் பொது மக்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர்.
சுபாங்ஜெயா, தாமான் பூச்சோங் பெர்டானாவைச் சேர்ந்தவரான 14 வயது கே.ஏ.. யுவினா ரதி என்ற அந்தப் பெண் டிசம்பர் 9 ஆம் தேதி, இரவு 7.17 மணியளவில் வீட்டில் காணவில்லை என்று குடும்பத்தினர் புகார் அளித்து இருப்பதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.
165 செண்டிமீட்டர் உயரம், 55 கிலோ எடைகொண்ட அந்தப் பெண்ணைப் பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தொடர்புகொள்ளுமாறு பொது மக்களை ஏசிபி வான் அஸ்லான் கேட்டுக்கொண்டார்.