பினாங்கு,டிச.17-
பயனீட்டாளர்களின் சமூக ஆர்வலர் கே. கோரிஸ் அதானுக்கு எதிராக பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமாசாமி தொடுத்த வழக்கில் இன்று தோல்விக் கண்டார்.
டாக்டர் இராமசாமியின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்வதாக பினாங்கு, ஜார்ஜ்டவுன், செஷன்ஸ் நீதிமனற்ம் இன்று தீர்ப்பு அளித்தது.
இதன் தொடர்பில் வழக்கின் பிரதிவாதியான கே.கோரிஸ் அதானுக்கு, டாக்டர் இராமசாமி, வழக்கு செலவுத் தொகையாக 10 ஆயிரம் வெள்ளி வழங்க வேண்டும் என்று நீதிபதி நஸிர் நோர்டீன் உத்தரவிட்டுள்ளதாக வாதியின் வழக்கறிஞர் ஷம்ஷேர் சிங் திண்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தி வைப்ஸ் அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் கருத்துரைத்தது தொடர்பில் கோரி ஸிற்கு எதிராக டாக்டர் இராமசாமி இந்த அவதூறு வழக்கை தொடுத்து இருந்தார்.