ரவூப், சீரோ தோட்டத்தில் புலி நடமாட்டம்

ரவூப், டிச. 17-

பகாங், ரவூப், சீரோ, 12 ஆவது மைல் கம்போங் இந்தியா முன்புறம் உள்ள ஹோக் ஜு தோட்டத்தில் புலி நடமாட்டம் இருப்பதாக போலீசிலும், வனவிலங்கு தேசிய பூங்கா இலாகாவான பெர்ஹிலித்தானிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.

சீரோ, ஹோக் ஜு தோட்டத்தின் உள் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதற்கு அடையாளமாக புலியின் கால் தடங்கள் பதிவாகியிருப்பதை அத்தோட்டத்தின் குமாஸ்தா கண்டு பிடித்து தகவல் அளித்துள்ளார்.

தகவல் கிடைத்து அவ்விடத்திற்கு விரைந்த சீரோ தோட்ட தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சண்முக நாதன், அந்த கால் தடங்களை கண்டறிந்ததாக குறிப்பிட்டார்.

புலியின் தடங்களாக சந்தேகம் வலுத்து இருப்பதால் அது குறித்து தாம், சீரோ போலீஸ் நிலையத்திலும், ரவூப், பெர்ஹிலித்தானிடமும் தாம் புகார் அளித்து இருப்பதாக சண்முக நாதன் குறிப்பிட்டார்.

பெர்ஹிலித்தான் அதிகாரிகளும் நேற்று தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்து விட்டு, சென்று இருப்பதாக சண்முகநாதன் விவரித்தார்.

சீரோ, ஹோக் ஜு தோட்டத்தின் முன்புறம் உள்ள கம்போங் இந்தியா கிராம மக்கள் சற்று பாதுகாப்பாக இருக்கும்படி சண்முகநாதன் கேட்டுக்கொண்டார்

WATCH OUR LATEST NEWS