செர்டாங், டிச. 17-
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பூச்சோங் ஜெயாவில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டியின் போது சில ஆட்டக்காரர்கள், நடுவரை சூழ்ந்துக்கொண்டு, சரமாரியாக தாக்கிய சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்த இது குறித்து போலீசார் விசாரணை செய்யத் தொடங்கியிருப்பதாக அன்பழகன் குறிப்பிட்டார்.
தவிர, இந்த கால்பந்தாட்டத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் 38 வயது நடுவர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் போலீசில் புகார் அளித்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
ஓர் அணிக்கு பெனால்டி வாய்ப்பை நடுவர் வழங்கியதில் அதிருப்தி அடைந்ததாக நம்பப்படும் மற்றொரு அணியைச் சேர்ந்த ஆட்டக்காரர்கள் சிலர், அந்த நடுவரை தாக்கியதாக நம்பப்படுகிறது.