ஜித்ரா, டிச.17-
ஒழுக்கக்கேடான பாலியல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்களை கொண்ட வீடியோக்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அலோர் ஸ்டார், செஷன்ஸ் நீதிமன்றம், துப்புரவு பணியாளர் ஒருவருக்கு 80 ஆயிரம் அபராதம் விதித்தது.
45 கமருல்நஸ்ரி டேசா என்ற அந்த நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி மஸ்டி அப்துல் ஹமிட், அபராதம் விதித்ததுடன் அதனை செலுத்தத் தவறினால் அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிப்பதாக தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி 11 மணியளவில் கெடா, ஜித்ரா, குபாங் பாசுவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.