கோலாலம்பூர், டிச. 17-
நேரடி சந்திப்பின்றி, ஓன்லைன் மூலம் ஆடவர் ஒருவருடன் காதல் வலையில் விழுந்து கிடந்ததாக நம்பப்படும் 67 மூதாட்டி ஒருவர் Love Scam மோசடியில் தனது வாழ்நாள் சேமிப்பு பணமாண 22 லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளார்.
சுமார் 7 ஆண்டு காலமாக அந்த ஆடவர் தன்னிடமிருந்து சன்னம், சன்னமாக பணத்தை கறந்துள்ளார் என்று அந்த மூதாட்டி போலீஸ் புகார் அளித்து இருப்பதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றத்தடுப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி யூசோப் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமான அந்த ஆடவர், தன்னை அமெரிக்க வர்ததகர் என்றும், சிங்கப்பூரில் மருத்துவ உபகரண்ங்களை விற்பனை செய்வதாகவும் கூறி, அந்த மூதாட்டியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு பிறகு இருவரும் ஓன்லைன் தொடர்பிலேயே நெருக்கமான ஆனப்பின்னர் அவசரத் தேவைக்காக முதலில் அந்த மூதாட்டியிடமிருந்து 5 ஆயிரம் ரிங்கிட்டை பெற்றவர், பின்னர் ஆசைவார்த்தைகளை கூறியே , அந்த வயோதிகப் பெண்மணியை வசப்படுத்தி, கட்டம் கட்டமாக பணத்தைப் பெற்றுள்ளார்.
50 க்கும் மேற்பட்ட மாறுப்பட்ட வங்கிக்கணக்குகளில் 305 வங்கி பண பரிமாற்றத்தின் வாயிலாக சம்பந்தப்பட்ட ஆடவரிடம் அந்த மூதாட்டி, மொத்தம் 22 லட்சத்து பத்தாயிரம் வெள்ளியை இழந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று டத்தோஸ்ரீ ரம்லி யூசோப் குறிப்பிட்டார்.