யோங் பெங், டிச.17-
ஜோகூர், யோங் பெங், தாமான் கோத்தா தொழிற்பேட்டைப்பகுதியில் உணவு ஸ்டால் கடையை நடத்தி வரும் வியாபாரி ஒருவர், உணவுப்பொருட்களை அடுக்கி வைக்கும் ரேக்கில் குழந்தை ஒன்று கைவிடப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.
இச்சம்பவம் நேற்று காலை 5 மணியளவில் நிகழ்ந்தது. ஸ்டால் கடை உரிமையாளரான சல்சுரா அப்துல் ரஹ்மான் என்பவர், தனது ஸ்டால் கடையை திறப்பதற்கு 17 வயது மகனுடன் காலையில் வந்த போது, வெளியிலிருந்து கை எட்டும் தூரத்தில் உள்ள உணவுப்பொருட்கள் அடுக்கி வைக்கப்படும் ரேக்கில், சிறு அட்டைப்பெட்டிக்குள் இருந்தது பூனை என்று முதலில் நம்பினார்.
ஆனால், குழந்தையின் கால்களை கண்டதும், உடல் சிலித்துப் போனதாக கூறும் அந்த உணவக உரிமையாளர் பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.