கோலாலம்பூர், டிச. 17-
மலாயா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள அந்தப் பல்கலைக்கழக மாணவி ஒருவர், அது குறித்து புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவி புகார் அளிப்பது மூலமே அது குறித்து துல்லியமாக விசாரணை செய்ய இயலும் என்று அந்த முன்னணி உயர் கல்விக்கூடத்தின் மாணவர் சங்கம் ஒன்று கூறுகிறது.
சம்பந்தப்பட்ட பேராசிரியர் தனது நிர்வாணப் புகைப்படத்தை அந்த மாணவியுடன் பகிர்ந்து கொண்டு, பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதேபோன்று பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் மற்ற மாணவிகளும் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று அந்த மாணவர் சங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.