கோலாலம்பூர், டிச. 17-
டீசல் மற்றும் பெட்ரோல் ரோன் 95 உட்பட அரசாங்கத்தின் மானியம் தொடர்பாக உதவித்தொகை குறித்து விவாதிப்பதற்கு சிறப்பு நாடாளுமன்றக்கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச்செலவின துணை அமைச்சர் ஃபுஸியா சல்லே தெரிவித்துள்ளார்.
இலக்குக்கு உயரிய மானியங்கள் தொடர்பிலான விவகாரங்களை அடுத்த ஆண்டில் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக்கூட்டத்தொடரில் விவாதிக்கலாம் என்று ஜெராண்டூட் எம்.பி. கைரில் நிஜாம் கிருடின் கேள்விக்கு துணை அமைச்சர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.