மலாக்கா, டிச. 17-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘டத்தோஸ்ரீ’ பட்டம் பெற தனிநபரிடம் மூன்று லட்சத்து 75 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் தனியார் நிறுவன மேலாளருக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு தடுப்பு காவல் பிறப்பிக்கப்பட்டது.
54 வயதுடைய அந்த நபருக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் நபிலா நிஜாம் பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபர், நேற்று மாலை 5.10 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மலாக்கா மாநில அலுவலகத்தில் சாட்சியம் அளிக்க வந்த போது, SPRM சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.