ஹெரி கொள்ளைக்கும்பல் முறியடிக்கப்பட்டது

பெந்தோங். டிச. 17-

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பகாங் பெந்தோங்கில் மிக தீவிரமாக செயல்பட்டு வந்த ஹெரி கொள்ளைக்கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் போலீசார் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டை மற்றும் சோதனை நடவடிக்கையில் ஹெரிI கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாயா ஓஸ்மான் தெரிவித்தார்.

27 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும், சிலாங்கூர் கோம்பாக், கோலாலம்பூர் ஸ்தாபாக் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக இன்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஸ்ரீ யாயா இதனை குறிப்பிட்டார்.

இந்த கும்பலைச் சேர்ந்த பேச்சா என்பவனை போலீசார் தொடர்ந்து தேடி வருதாக அவர் மேலும் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS