குவந்தான், டிச. 18-
குவந்தான், ஜாலான் குவந்தான், பைபாஸ்,, ஓர் எண்ணெய் நிலையத்திற்கு அருகில் சாலையை கடக்க முற்பட்ட ஒரு வங்காளதேப்பெண், காரினால் மோதப்பட்டு உயிரிழந்தார். நேற்று இரவு 11.50 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 21 வயது நஹேரிமா சுல்தானா நிஹாமோனி என்ற வங்காளதேசப் பிரிஜை உயிரிழந்ததாக போலீசார் அடையாளம் கூறினர்.
பெரோடுவா மைவீ காரினால் மோதப்பட்ட அந்த இளம்பெண், தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார். இதில் கார் ஓட்டநர் காயம் அடையவில்லை என்று குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் சஹாரி வான் புசு தெரிவித்தார்.
யாரும் எதிர்பார்க்காத நிலையில் அந்தப் பெண் மின்னல் வேகத்தில் சாலையில் கடக்க முற்பட்ட வேளையில் கார் ஓட்டுநர், அவரை மோதுவதிலிருந்து தவிர்க்க இயலவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி வான் மேலும் கூறினார்.