குளுவாங், டிச. 18-
பொது கழிப்பறையில் மாது ஒருவரை பாலியல் பலாத்காரம் புரிய முயற்சி செய்த ஆடவர் ஒருவரை பொது மக்கள் வளைத்துப்பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.50 மணியளவில் ஜோகூர், குளுவாங், லாமன் கிரேட்டிவ் கம்போங் மிலாயு என்ற இடத்தில் உள்ள பொது கழிப்பறையில் நிகழ்ந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமட் நோ தெரிவித்தனர்.
அப்பகுதியில் வர்த்தகம் நடத்திய வந்த 24 வயது மாது, பொது கழிப்பறையை பயன்படுத்த, நுழைந்த போது, அவரின் பின்னாலேயே தொடர்ந்து வந்த ஆசாமி ஒருவன், அவர் பயன்படுத்திய கழிப்பறைக்குள் மின்னல் வேகத்தில் நுழைந்து, கதவை தாழீட்டுக்கொண்டு, சத்தம் போட வேண்டாம் என்று அச்சுறுத்தியதாக ஏசிபி பஹ்ரின் தெரிவித்தார்.
தன்னை காப்பாற்றிக்கொள்ள அந்த மாது, உரக்க கத்தி கூச்சலிட்டததைத் தொடர்ந்து அந்த பொது கழிப்பறையின் பிரதான கதவையும் அந்த நபர் பூட்டிக்கொண்டார்.
அந்த ஆசாமியிடம் சில நிமிடங்கள் கடுமையாக போராடிய அந்த மாது, சற்று பருமனான உடல் அ மைப்பைக் கொண்ட அந்த நபரை கீழே தள்ளி, சாய்த்து விட்டு, கதவை திறந்துக்கொண்டு, வெளியே ஓடி வந்த , பொது மக்களிடம் உதவிக் கோரி, கூச்சலிட்டதாக ஏசிபி பஹ்ரின் குறிப்பிட்டார்.
கீழே விழுந்த அந்த நபர், தட்டுதடுமாறி எழுந்து, கழிப்பறையை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாகவே கழிப்பறைக்குள் நுழைந்த பொது மக்கள், அந்த நபரை வளைத்துப்பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தாக ஏசிபி பஹ்ரின் குறிப்பிட்டார்.
ஒரு வேலையற்ற நபரான 34 வயதுடைய அந்த நபருக்கு ஏற்கனகே 6 குற்றப்பதிவுகள் உள்ளன. கழிப்பறைக்குள் அந்த ஆசாமியுடன் போராடியதில் , அந்த மாது வாய் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த மாது வாயிலும் உடலிலும் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று ஏசிபி பஹ்ரின் தெரிவித்தார்.
அந்த நபர், இன்று புதன்கிழமை காலையில் குளுவாங் மாஜிஸ்திரேட் நீதமின்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.