கூலாய், டிச. 18-
ஜோகூர், கூலாய் வட்டாரத்தில் தனியார் ஆதரவற்றோர் இல்லத்தை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் கைரின் நிசா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அந்த இல்லத்தை வழிநடத்தி வந்த அ தன் உரிமையாளர், இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரம் மற்றும் சித்ரவதை சம்பவங்களில் ஈடுபட்டதாக புகார்கள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் அந்த தனியார் இல்லத்தை தற்காலிகமாக மூடுவதற்கு ஆணைப்பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கைரின் நிசா குறிப்பிட்டார்.
இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாக சமூக நல இலாகாவின் தலைமை இயக்குநர் அதிகாரத்தின் கீழ் உள்ள 1993 ஆம் ஆண்டு ஆதரவற்றோர் பராமரிப்பு சட்டத்திற்கு ஏற்ப அந்த இல்லத்தில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது இவ்விவரம் உறுதி செய்யப்பட்டதாக கைரின் நிசா தெரிவித்தார்.
குறிப்பாக கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அந்த இல்லத்தில் 55 சிறார்கள் தங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது என்று கைரின் நிசா விளக்கினார்.