வெளியுறவு அமைச்சருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்படும்

கோலாலம்பூர், டிச. 18-


நண்பர்கள் சிலருடன் உணவகம் ஒன்றில் அமர்ந்திருந்த போது, சிகரெட் புகைத்துக்கொண்டு இருந்த வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானுக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமட் தெரிவித்துள்ளார்.

தாம் ஏற்கனவே கூறியதைப் போல சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்ற அடிப்படையில் தடை செய்யப்பட்ட பகுதியில் புகைப்பிடித்துக்கொண்டு இருந்த வெளியுறவு அமைச்சருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று டாக்டர் சுல்கிப்லி குறிப்பிட்டார்.

அதேவேளையில் அ மைச்சர் முகமட் ஹசான், அந்த உணவகத்தில் பகிரங்கமாக சிகரெட் புகைப்பதை காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள சட்ட விதிகளுக்கு ஏற்ப அபராதத் தொகையை தாம் செலுத்தவிருப்பதாக அவர் தம்மிடம் தெரிவித்துள்ளார் என்று டாக்டர் சுல்கிப்லி தெரிவித்தார்.

சிரம்பான் சுகாதார இலாகா அதற்கான அபராத நோட்டீஸை, முகமட் ஹசானிடம் சார்வு செய்யும் என்று டாக்டர் சுல்கிப்லி விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS