டிச. 18-
பெண்ணைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர், கம்போடியாவில் நடந்த ஆசியக் கிண்ணக் காற்பந்து போட்டியில் மலேசியா-கம்போடியா ஆட்டத்தைப் பார்க்க Phnom Penh செல்ல பணம் தேவைப்பட்டதால் அக்கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து சரவாக் காவல் துறைத் தலைவர் Mancha Ata தெரிவிக்கயில், கைது செய்யப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டவரின் தங்க நகைகள், கைக்கடிகாரம், காதணிகள் ஆகியவற்றை எடுத்து அடகு வைத்ததாகவும் கூறினார்.
காவல் துறை விசாரணையில் சந்தேக நபர் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார், மேலும் , கிடைத்த சாட்சியின் அடிப்படையில், இந்த வழக்கு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது என்று காவல் துறை நம்புவதாக Mancha Ata குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறபட்ட 25 வயது Nurul Asikin Lan என்பவரைக் காவல் துறை தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கூச்சிங்கின் Tabuan Jayaவில் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
சடலம் மிகவும் அழுகிய நிலையில் இருந்ததால், பெண்ணின் குடும்பத்தினர் அவரை அடையாளம் காண முடியவில்லை. எனவே, அடையாளம் தெரியாத சடலத்தின் மரபணு பரிசோதனை முடிவுகள் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.