நிரந்தர பணியிடங்களை தொடர்ந்து நிரப்ப சுகாதார் அமைச்சு உறுதியளித்துள்ளது

டிச. 18-

நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார வசதிகளிலும் நிரந்தர பணியிடங்களை தொடர்ந்து நிரப்ப சுகாதார் அமைச்சு உறுதியளித்துள்ளது.

சுகாதார துறையில் மனிதவளத்தை வலுப்படுத்துவதற்கான பல்வேறு முன்முயற்சிகளை அமைச்சு செயல்படுத்தியுள்ளதாகவும், குறிப்பாக நாடு முழுவதும் உள்ள சுகாதார வசதிகளில் நிரந்தர பணியிடங்களை நிரப்புவதை உறுதி செய்துள்ளதாகவும் துணை அமைச்சர் Datuk Lukanisman Awang Sauni கூறினார்.

சுகாதார அமைச்சில் நிபுணத்துவ சேவைகளின் திட்டமிடலையும் இயக்கத்தையும் எளிதாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும், நிபுணத்துவம் கொண்ட மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள், துணை மருத்துவ அதிகாரிகள் ஆகியோரின் பணியிட வழிகாட்டி தயாரிப்பது போன்றவை அடங்கும்.

சுகாதாரத் துறையில் குறிப்பாக மருத்துவர்கள், தாதுயர்கள், ஆதரவு ஊழியர்களின் பற்றாக்குறை பிரச்சினையை சமாளிக்க அரசாங்கம் எடுத்த உடனடி நடவடிக்கைகள் குறித்த செனட்டர் பேராசிரியர் n Sri Datuk Dr Mohamed Haniffa Abdullahவின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த செப்டம்பர் 30 வரை சுகாதார அமைச்சின் பணியாளர் தரவு பகுப்பாய்வின்படி, 2 இலட்சத்து 99 ஆயிரத்து 672 சுகாதார ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 2 இலட்சத்து 66 ஆயிரத்து 898 நிரந்தர பணியாளர்களும் 32 ஆயிரத்து 774 ஒப்பந்த பணியாளர்களும் அடங்குவர்.

WATCH OUR LATEST NEWS