டிச. 18-
பிரதமர் Datuk Seri Anwar Ibrahimஐ ஆதரிக்கும்படி , தாசிக் கெலுகூர் நாடாளுமன்ற உறுப்பினர் Wan Saiful Wan Jan மிரட்டப்பட்டதாகவும், கையூட்டு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டதை அடுத்து, அதிகாரிகளிடம் முறைப்படி புகார் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உரிமை, சுதந்திரக் குழு பரிந்துரைத்துள்ளது.
Wan Saifulலின் வாக்குமூலம் குற்றச்சாட்டை உள்ளடக்கியதாகக் கருதி, அதிகாரிகள் மேலும் விசாரணை செய்ய வேண்டும் என்று அடந்த டிசம்பர் 12 ஆம் தேதி அவைத் தலைவர் Johari Abdul வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழு, வான் சைபுலுடன் நடந்த கூட்டங்கள் குறித்தும், அவரது குற்றச்சாட்டுகளை ஆதரிக்கும் பல்வேறு ஆதாரங்கள் குறித்தும் தகவல்கள் இருப்பதாக இந்த குழு கண்டறிந்துள்ளது.
வான் சைபுல் இந்த விவகாரம் குறித்து காவல் துறை , ஊழல் தடுப்பு ஆணையம், தகவல் தொடர்பு , பல்லூடக ஆணையம் ஆகியவற்றுக்கு முறைப்படி புகார் செய்ய வேண்டும் என்று ம் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.