டிச. 18-
ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பத்து பூத்தே தீவு இறையாண்மை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி, பொய்யுரைத்து வருவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவிற்கு எதிராக 20 அரச சாரா இயக்கங்கள் போலீசில் புகார் செய்துள்ளன.
நாட்டின் அரசுரிமை சார்ந்த ஒரு விவகாரத்தை மூடிமறைப்பதற்கு பல்வேறு பொய்யான தகவல்களை கூறி, மக்களை குழப்பி வருவதாக 99 வயதான துன் மகாதீருக்கு எதிராக அந்த அரசு சாரா இயக்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
2018 ஆம் ஆண்டில் நாட்டிற்கு இரண்டாவது முறையாக பிரதமராக துன் மகாதீர் பொறுப்பேற்று இருந்த போது, தமது அதிகாரத்தை தவறாக பயன்பத்தியுள்ளதாக அந்த அமைப்புகள் குறைகூறின.
இதன் தொடர்பில் துன் மகாதீருக்கு விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் இன்று அளித்த புகாரில் அந்த 20 அரசு சாரா அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.