Tengku Zafrul Aziz வரவினால் அதிர்ச்சி வைத்தியம் காத்திருக்கிறது

டிச. 18-

முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் Tengku Zafrul Aziz, பிகேஆர் கட்சியில் இணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வரும் வேளையில் சிலாங்கூர் மாநிலத்தில் அவருக்கு முக்கியப் பதவி காத்திருப்பதாக ஆருடங்கள் வலுத்து வருகின்றன..

பிகேஆர். கட்சியில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையில் தாம் பங்கேற்றதை Tengku Zafrul Aziz மறுக்கவில்லை என்றாலும் அது குறித்து இன்னும் தீர்க்கமாக முடிவு எடுக்கப்படவில்லை என்பதையும் விளக்கியுள்ளார்.

இந்நிலையில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தேஸ்ரீ அமிருடின் ஷாரி, அமைச்சரவைக்கு கொண்டு வரப்படலாம் என்ற ஆருடமும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரான அமிருடின் ஷாரி, சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியிலிருந்து மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று முக்கியத் தலைவர்கள் தற்போது கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அம்னோவின் சிலாங்கூர் மாநில பொருளாளரான Tengku Zafrul Aziz – யை பிகேஆர் கட்சியின் மூலமாக முக்கியப் பதவிக்கு கொண்டு வரப்படலாம் என்பதை உறுதிப்படுத்துவது போல் பேசப்பட்டு வருகிறது.

WATCH OUR LATEST NEWS