கோலாலம்பூர், டிச. 20-
சபா ஆளுநராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ள துன் மூசா அமானின் நியமனத்தை சர்ச்சை செய்ய வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக லஞ்ச ஊழலை வேரறுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் மூசா அமானின் நியமனத்தை தொடர்புப்படுத்தி பேச வேண்டாம் என்று அன்வார் வலியுறுத்தினார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சபாவில் வெட்டுமரக் குத்தகை மற்றும் சட்டவிரோதப் பணமாற்றம் தொடர்பாக மூசா அமானுக்கு எதிராக நீதிமன்றத்தில்கொண்டு வரப்பட்ட 46 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அந்த சபா தலைவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.
எனவே நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட ஒருவர், சபா ஆளுராக நியமிக்கப்பட்ட பின்னர் அவரின் நியமனத்தை கேள்வி எழுப்புவது எந்த வகையிலும் ஏற்புடைய செயல் அல்ல என்று டத்தோஸ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.
மேலும் மூசா அமான், மாமன்னரால் சபா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதையும் பிரதமர் விளக்கினார்.