தந்தையின் புதைக்குழியை தோண்டும் விண்ணப்பம் நிராகரிப்பு

சிரம்பான், டிச. 20-


7 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய சமய சடங்கிற்கு ஏற்ப நல்லடக்கம் செய்யப்பட்ட தமது தந்தையின் உடலைத் தோண்டி எடுத்து, மறுபடியும் இந்து முறைப்படி நல்லடக்கம் செய்தவதற்கு ஏதுவாக அவரின் புதைக்குழியை தோண்டுவதற்கு நபர் ஒருவர் செய்து கொண்ட விண்ணப்பத்தை சிரம்பான் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அந்த நபர் தாக்கல் செய்த அப்பிடெவிட் மனு மற்றும் எழுத்துப்பூர்வமான வாதத் தொகுப்பை செவிமடுத்த நீதித்துறை ஆணையர், முகமட் ஹைடர் அப்துல் அஸிஸ், அந்த விண்ணப்பத்தை நிராகரிப்பதாக தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

இந்த பூர்வாங்க வழக்கு மனுவை 51 வயது ரோஸ்லி மாமாட் என்பவர், கடந்த ஆண்டு ஜுலை 31 ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.

1941 ஆம் ஆண்டில் பிறந்த தமது தந்தை மஹாட் சுலைமான், பாபா நோஞா கலாச்சாரத்தைப் பின்பற்றி ஓர் இந்துவாகவே சமய நடவடிக்கைகளை பின்பற்றி வந்துள்ளார் என்று ரோஸ்லி மாமாட் தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

எனினும் அவரின் விண்ணப்பத்தை ரத்து செய்யக்கோரி நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய இலாகா செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதாக நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS