கோலாலம்பூர், டிச. 20-
வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து கடலோர நடவடிக்கைகளுக்கு மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் அகற்றப்படவில்லை என்று மலேசிய பொது தற்காப்புப்படை அறிவித்துள்ளது.
பள்ளிவிடுமுறையை தொடங்கியுள்ள வேளையில் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு கடலோர நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுவதாக பொது தற்காப்பு படை தெரிவித்துள்ளது.