பிரிந்து வாழும் கணவரை கைது செய்யுமாறு மாது கோரிக்கை

கோலாலம்பூர், டிச. 20-


தம்முடனான இல்லற வாழ்க்கையிலிருந்து பிரிந்து வாழும் தமது கணவர், நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப தனது குழந்தையை ஒப்படைக்க வேண்டும் என்று மாது ஒருவர் இன்று போர்கொடித் தூக்கியுள்ளார்.

தனது மூன்று வயது மகள் கிருஷ்ணா கண்ணாவை வெளிநாட்டில் வைத்திருப்பதாக நம்பப்படும் தனது கணவர், குழந்தையை ஒப்படைக்க மறுத்து வருவதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று 31 வயது தேவித்திரா விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.

தனது குழந்தையை ஒப்படைக்க மறறுத்து விட்டதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டார் என்பதற்காக அவரை கைது செய்யும்படி ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் கைது வாரண்டை பிறப்பித்து இருப்பதையும் அந்த மாது சுட்டிக்காட்டினார்.

தனக்கும், தனது கணவர் கண்ணன் ராஜரத்னத்திற்கும் இடையிலான மணமுறிவு வழக்குக்கு தீர்வு காணப்படும் வரையில் தனது மூன்று வயது குழந்தையை பராமரிக்கும் உரிமையை நீதிமன்றம் தமக்கு வழங்கியிருப்பதையும் தேவித்திரா விஸ்வநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது குழந்தை பாதுகாப்பாக வீடு வந்த சேர வேண்டும் என்பதே தம்முடைய தற்போதைய எதிர்பார்ப்பாகும் என்று தேவித்திரா கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS