கோலாலம்பூர், டிச. 20-
வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விழாக்கால உச்சவரம்பு விலை பட்டியலில் 14 வகையான பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரப்பிரிவு அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமட் அலி அறிவித்துள்ளார்.
இந்த 14 வகையான பொருட்களின் விலையும் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 27 ஆம் தேதி ரை விலைகட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விலை பட்டியலில் இடம் பெற்று இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
முட்டைக்கோஸ், கேரட், தக்காளி, சிவப்பு மிளகாய், இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு வெங்காயம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, பன்றி இறைச்சி உட்பட 14 வகையான பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.