ரோஸ்மா விடுதலையை எதிர்த்து பிராசிகியூஷன் மேல்முறையீடு

கோலாலம்பூர், டிச. 20-


ரோஸ்மா மன்சோர் சட்டவிரோதப்பண மாற்றம் மற்றும் வருமான வரி ஏய்ப்பு தொடர்பான 17 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டதைத் எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு, இன்று புத்ரா ஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நோக்கம் கொண்டுள்ளவர்கள் தீர்ப்பு அளிக்கப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் மேல்முறையீட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஷரக்கு ஏற்ப மேல்முறையீட்டிற்கான மனுவை பிராசிகியூஷன் இன்று மாலையில் தாக்கல் செய்துள்ளது.

70 லட்சம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 17 குற்றச்சாட்டுகளிலிருந்து 73 வயது ரோஸ்மா மன்சோர், நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதை துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அகமட் அக்ராம் காரிப் உறுதிப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS