கோலாலம்பூர், டிச. 20-
இந்தியப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசா விலக்களிப்பு சலுகையை மலேசியா, 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடித்துள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானுக்கு மலேசியா 2025 ஆம் ஆண்டு தலைமையேற்பது மற்றும் 2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை புரியும் சுற்றுலா ஆண்டு ஆகிய உச்ச நிகழ்வுகளையெட்டி சீனாப்பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசா விலக்களிப்பைப் போல இந்தியப் பிரஜைகளுக்கும் மலேசியா விசா விலக்களிப்பு சலுகையை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரஜைகள் விசாயின்றி 30 நாட்களுக்கு மலேசியாவில் தங்கியிருப்பதற்கு இந்த விலக்களிப்பு வகை செய்வதாக வெளியுறவு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.