கோலாலம்பூர், டிச. 21-
மலாயாப் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு தனது நிர்வாணப்படத்தை அனுப்பிவைத்து, பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படும் அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவரை இடைநீக்கம் செய்யக்கோரி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வலுத்து வருகிறது.
அதேவேளையில் அந்த விரிவுரியாளரின் இந்த வக்கிர செயலுக்கு எதிராக அவர் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த முன்னணி பல்லைக்கழகத்தின் மாணவர் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இவ்விவகாரம் தற்போது போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற போதிலும் விசாரணை முடிவடையும் வரையில் அந்த விரிவுரையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று மாணவர் மன்றம் ஒன்று பல்கலைக்கழக நிர்வாகத்தற்கு ஓர் அவசர கடிதத்தை வழங்கியுள்ளது.