சாலையில் யானைக்கூட்டம்: பீதியில் வாகனமோட்டிகள்

கிரீக்,டிச. 21-


கிளந்தான் ஜெலியையும்,/ பேராக் கிரீக்கையும் / இணைக்கும் மேற்கு கிழக்கு சாலையின் மத்திய மலைத்தொடர் பகுதியில் திடீரென்று 15 க்கும் மேற்பட்ட யானைக்கூட்டம் சாலையில் சூழ்ந்துக்கொண்டு, இடையூறு விளைவித்தது, வாகனமோட்டிகளை பீதியில் ஆழ்த்தியது.

வாகனமோட்டிகள் பலர், மிகுந்த அச்சத்தினால் வந்த வழியிலேயே வாகனத்தை திருப்பிக்கொண்டு சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த உயர்க்கல்விக்கூட மாணவி ஒருவர், அந்த இக்கட்டான தருணத்தை தமது முகநூலில் பகிர்ந்துக்கொண்டார்.

கடந்த புதன்கிழமை கிளந்தான், தும்பாட்டிலிருந்து கெடா, சுங்கைப்பட்டாணியில் உள்ள தமது கிராமத்திற்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்த போது, இந்த எதிர்பாராத சம்பவத்தை எதிர்கொள்ள நேர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த யானைக்கூட்டத்தில் ஒரு யானை மட்டும் மதம் பிடித்தததைப் போல் மிக ஆவேசமாக செயல்பட்டது இதர வாகனமோட்டிகளை பயத்தில் ஆழ்த்தியதாக அந்த மாணவி தெரிவித்தார்.

பலர் / வாகனங்களை திருப்பிக்கொண்டு சென்ற வேளையில் சாலையின் மத்தியில் சிக்கிக்கொண்ட தங்கள் வாகனத்தை நோக்கி அந்த யானை, வந்த போது காரில் இருந்த தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் பீதியில் உறைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அதிர்ஷ்டவசமாக அந்த யானை காரை சேதப்படுத்தாத நிலையில் தனது தும்பிக்கையால் தொட்டு பார்த்து விட்டு சென்றதாக திரெங்கானுவில் உயர்கல்விக்கூடம் ஒன்றில் பயின்று வரும் நூருல் நசிரா எட்ரிஎன்ற 20 வயதுடைய அந்த மாணவி தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS