ரோஸ்மா மன்சோர் விடுதலை, உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிப்பீர்

கோலாலம்பூர், டிச. 21-


சட்டவிரோதப் பண மாற்றம், வரி ஏய்ப்பு என 17 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டு இருக்கும் முன்னள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் விடுதலை குறித்து பக்காத்தான் ஹராப்பானும், அதனை சார்ந்த கட்சிகளும் உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதாக கூறி, நீதிமன்றம் வரை சென்ற 70 லட்சம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 17 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய வழக்கில் ரோஸ்மா மன்சோர் விடுதலை செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாக டிஏபி மூத்தத் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.

லஞ்ச ஊழலில் சிக்கியவர்கள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து தொடர்ச்சியாக விடுதலையாகி வருவது பக்காத்தான் ஹராப்பான் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி விடும் என்று அந்த மூத்த தலைவர் எச்சரித்துள்ளார்.

மலேசிய நீதித்துறை மற்றும் அரசாங்கத்தின் நன்மதிப்பை சிதைக்கும் இது போன்ற விவகாரங்களுக்கு முறையான விளக்கமளிப்பு அவசியமாகும் என்று அந்த மூத்த தலைவர் வலியுறுத்துகிறார்.

WATCH OUR LATEST NEWS