கங்கார், டிச. 21-
பெர்லிஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரே தமிழ்ப்பள்ளியான கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக்கின் வருகை வரலாற்றுப்பூர்வமான ஒன்று என்றார் அப்பள்ளியின் தலைமையாசிரியர் க. உதயகுமார்.
அண்மையில் கங்கார் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி நிலையை இன்னும் எளிமையான முறையில் செயல்படுவதற்கு அம்மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக், கையடக்க கருவி வழங்கினார்.
பெர்லிஸ் மாநிலத்தில் இந்தியர்களின் மக்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் இருந்து வந்தாலும் அம்மாநிலத்திலும் தமிழ் மாணவர்களுக்காக கங்கார் தமிழ்ப்பள்ளி இயங்கி வருகின்றது . இப்பள்ளியில் 58 மாணவர்கள் பயின்று வரும் வேளையில் 13 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு வருகைப்புரிந்த கல்வி அமைச்சர் ஃபாட்லினா சீடேக் மாணவர்களுடன் இணைந்து மடானி பாடலை பாடியது மிகுந்த கவன ஈர்ப்பாக அமைந்தது.
இப்பள்ளியில் பயிலும் 90 விழுக்காடு மாணவர்கள் குறைந்த வருமானம் பெறும் நடுநிலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் . இருந்தப்போதிலும் குழந்தைகளின் கல்வி கற்றப்பித்தலில் அம்மாணவர்களின் பெற்றோர்கள் அதிக ஊக்குவிப்பை வழங்கி வருகின்றனர். பள்ளியின் சார்பிலும் மாணவர்களின் அடைவுநிலையை உயர்த்துவத்தற்காக பல நவடிக்கைகளை கங்கார் தமிழ்ப்பள்ளி மேற்கொண்டு வருவதாக உதயகுமார் கூறினார் .

அந்த வகையில் மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் பின் தொடர்ந்து கல்வி கற்பதற்கு இணைய சேவையும் கணினி சேவையும் அவசியமாக இருந்து வருகின்றது. அச்சேவையை கங்கார் தமிழ்ப்பள்ளியில் பூர்த்திச் செய்வதற்காக குறிப்பிட்ட மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக், கையடக்க கருவி வழங்கியத்தற்கு பள்ளியின் சார்பில் நன்றினைத் தெரிவித்துக் கொண்டார் தலைமை ஆசிரியர் உதயகுமார்..
கங்கார் தமிழ்ப்பள்ளிக்கு கல்வி அமைச்சின் வருகையும் அவர் தமிழ்ம்பள்ளி மாணவர்களின் மீது வைத்துள்ள கருணையும் பெருமிதத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று தலைமையாசிரியர் குறிப்பிட்டார்.

( செய்தி & படம் : ஹேமா எம். எஸ். மணியம் )