கோலாலம்பூர், டிச. 21-
கோலாலம்பூர் அம்பாங் ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்திற்கான பண்டார் தாசேக் செலத்தான் எல்.ஆர்.டி. ரயில் நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டு கால்பந்து அணிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் பெரும் அமளிதுமளியும், கைகலப்பும் ஏற்பட்டது.
நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் இருந்த உதவி போலீசார் மூலம் இரு குழுக்களின் ஆதராவாளர்களுக்கு இடையான சண்டை தடுத்து நிறுத்தப்பட்டது.
இச்சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்ற போதிலும் எல். ஆர்.டி. ரயில் நிலையத்தின் கண்ணாடி கதவு மற்றும் பிளாட்பாரத்தில் நின்று கொண்டு இருந்த எல்.ஆர்.டி ரயிலின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பில் எல்.ஆர்.டி. ரயில் சேவையை வழிநடத்தி வரும் பிரசரனா நிறுவனம் போலீசில் புகார் செய்துள்ளது.