முதியவரின் மரணத்தில் குற்றத்தன்மை இல்லை

ஈப்போ, டிச. 21-


ஈப்போ, செர்ரி அபார்ட்மெண்ட் வீடமைப்புப்பகுதியில் 68 வயது முதியவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவத்தில் குற்றத்தன்மை அம்சங்கள் எதுவும் இல்லை என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அபாங் ஸைனால் அபிடின் அபாங் அகமட் தெரிவித்தார்.

அந்த முதியவரின் மரணம் குறித்து பல கோணங்களில் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் குற்றத்தன்மைக்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. இதனை திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார்.

68 வயதுடைய அந்த முதியவர், உயர் ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏசிபி அபாங் ஸைனால் மேலும் கூறினார்.

முதியவரின் உறவினர்கள் விடுத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, த் அத்ந வீட்டில் நேற்று இரவு 11.10 மணியளில் தீயணைப்பு,மீட்புப்படையினரின் உதவியுடன் அந்த முதியவரின் உடல் மீட்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS