கோலாலம்பூர், டிச. 21-
வடகிழக்கு பருவமழையினால் பல்வேறு மாநிலங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, விளைச்சல்கள் பாதிக்கப்பட்ட போதிலும் மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் அளவிற்கு நாட்டில் போதுமான உணவு விநியோகம் இருப்பதாக விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறைஅமைச்சசர் மகமட் சாபு தெரிவித்தார்.
ஆசியான் நாடுகளுடன் மலேசியா அணுக்கமான தொடர்பையும் நட்புறவையும் கொண்டு இருப்பதால் உணவு விநியோகம் பாதிக்கப்படும் பட்சத்தில் அந்த நாடுகளிலிருந்து உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்ய முடியும் என்று முகமட் சாபு குறிப்பிட்டார்.