கோலாலம்பூர், டிச. 21-
இந்தியப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசா விலக்களிப்பு சலுகையை மலேசியா, 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடித்து இருப்பதை மலேசிய குடிநுழைவுத்துறை வரவேற்றது.
இதற்கு முன்பு இது போன்ற விசா விலக்களிப்பு வசதிகள், லிபராலிசி விசா என்ற திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதியிலிருந்து இவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட்டு இருப்பதையும் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜக்கரியாக ஷாபான் தெரிவித்தார்.
இந்தியப்பிரஜைகளுக்கு இதுபோன்ற விசா விலக்களிப்பு சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பது மூலம் நாட்டின் பாதுகாப்பு அம்சங்களுக்கு எந்தவொரு குத்தகமும் ஏற்படாமல் மலேசியாவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசிய அரசாங்கம் வழங்கிய இந்த விசா விலக்களிப்பு சலுகை வாயிலாக இந்தியப் பிரஜைகள் விசாயின்றி 30 நாட்களுக்கு மலேசியாவில் தங்கியிருப்பதற்கு இந்த விலக்களிப்பு சலுகை வகை செய்வதாக வெளியுறவு அமைச்சு நேற்று விளக்கம் அளித்திருந்தது.