பிராசிகியூஷன் வழக்குகள் பலவற்றில் ஊனமும், குறைபாடும் ஏற்பட்டது ஏன்? பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கம்

கோலாலம்பூர், டிச. 21-


பிராசிகியூஷன் தரப்பு சார்வு செய்த பல வழக்குகளில் ஊனமும், குறைபாடும் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம், அவை, அவசரக் கதியாக நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வழக்குகளாகும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெளிவுபடுத்தினார்.

2018 ஆம்ஆண்டு பொதுத்தேர்தலுக்கு பிறகு பல வழக்குகள் அவசர கதியில் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த நேரத்தில் தொடுக்கப்பட்ட பல வழக்குகள், விஷம் பாய்ச்சப்பட்ட வஞ்சகத்துடனும், பகைமை உணர்வுடனும் மேற்கொள்ளப்பட்டதாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று சுபாங்ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரதமர் இவ்விவரத்தை வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோதப் பணமாற்றம் மற்றும் வரி ஏய்ப்புத் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் 17 குற்றச்சசாட்டுகளிலிருந்து விடுவிக்ககப்பட்டது தொடர்பில் கருத்துரைக்கையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

எனினும் ரோஸ்மாவிற்கு எதிரான வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஆனால், 2018 பொதுத் தேர்தலுக்கு பிறகு அதிகாரத்தில் இருந்தவர்கள் தாங்கள் கொண்டிருந்த முந்தைய பகைமையினால் அரசியல் பழிவாங்கலுடன் இந்த வழக்குகளை தொடுத்துள்ளனர் என்று டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS