கூச்சிங், டிச. 21-
தொலை தூரப் பயணம் மேற்கொள்ளும் விரைவு
பேருந்துகள் குறிப்பாகப்பாக, பெருநாள் காலங்களில் இரண்டாவது ஓட்டுநரைக் கொண்டிருப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்களை தவிர்ப்பதற்கு ஏதுவாக பேருந்து ஓட்டுநர்கள் கவனமுடனும் சாலை விதிகளைப் பின்பற்றி பேருந்துகளைச் செலுத்துவதை உறுதி செய்ய உரிய கண்காணிப்பை மேற்கொள்ளும்படி சாலை போக்குவரத்து இலாகாவை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.
பேருந்தைச் செலுத்தும் போது ஓட்டுநர்கள் கைப்பேசியைப் பயன் படுத்தாமல் இருப்பதையும் கவனக் குறைவாக செயல்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய நாங்கள் ‘உளவுத்துறையினரை பணிக்கு அமர்த்தியுள்ளோம் என்று அவர் சொன்னார்.
சரவாக், கூச்சிங் சென்ட்ரல் பேருந்து முனையைத்தில் சரவா மாநில
நிலையிலான 2024 கிறிஸ்துமஸ் சாலை பாதுகாப்பு இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அந்தோணி லோக் இதனைத் தெரிவித்தார்.