ஜோகூர்பாரு, டிச. 21-
வங்காளதேச பிஜைகளிடம் தலா 13,000 வெள்ளியை வசூலித்து வந்த மனித கடத்தல் கும்பல், ஜோகூர், லார்கின் இண்டாவில் உள்ள ஒரு டிரான்சிட் இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை மலேசிய குடிநுழைவுத் துறை நடத்திய சோதனையில் பிடிபட்டது.
அன்றைய தினம் 2.50 மணியளவில் நடத்தப்பட்ட ஒப்ஸ் செர்காப் நடவடிக்கையின் மூலம் 37 மற்றும் 42 வயதுடைய இரண்டு வங்காளதேச ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமது டாருஸ் கூறினார்.
வங்காளதேச குடிமக்களை சிங்கப்பூர் வழியாக மலேசியாவிற்கு கடத்தும் இந்த நடவடிக்கை கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப் பட்டதாக நம்பப்படுகிறது.
கடப்பிதழ்கள், 14,500 ரிங்கிட் ரொக்கம் மற்றும் ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டது. அச்சோதனையின் போது அந்த டிரான்சிட் வீட்டில் இரண்டு ஆடவர்கள் மட்டுமே இருந்துள்ளனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.