அபராதத் தொகையை செலுத்தினார் அமைச்சர் தோ மாட்

சிரம்பான், டிச.21-


சிரம்பானில் உள்ள ஓர் உணவகத்தில் நண்பர்களுடன் சிகரெட் புகைத்துக்கொண்டு இருந்த வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், சுகாதார இலாகா தமக்கு விதித்திருந்த அபராதத்தொகையை செலுத்தியுள்ளார்.

முகமட் ஹசான், ஓர் உணவகத்தில் பகிரங்கமாக புகைப்பிடித்துக்கொண்டிருந்த காட்சியைக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதேவேளையில் சுகாதார இலாகா விதிக்கும் அபராதத் தொகையை செலுத்த தாம் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.

அதன்படி சிரம்பான் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தமக்கு வெளியிடப்பட்ட கம்பாவுனுக்கு அமைச்சர் அபராதத் தொகையை செலுத்தினார்.

WATCH OUR LATEST NEWS