கோலாலம்பூர்,டிச. 21-
சபா ஆளுநர் பதவிக்கு மற்றவர்களின் பெயர்களையும் பரிசீலனைக்கு தாம் முன்மொழிந்தாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெளிவுப்படுத்தினார்.
மற்றவர்களின் பெயர்களையும் பரிசீலிக்குமாறு மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கும் தாம் ஆலோசனைக் கூறியதையும் அவர் நினைகூர்ந்தார்.
சபா மாநில ஆளுநர் பதவியை ஏற்றது மூலம் துன் மூசா அமான் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டு வரும் வேளையில் அதனை நிறுத்துவதற்கு பிரதமர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.
துன் மூசா அமானுக்கு எதிராக கூறப்படும் விமர்சனங்களை தடுத்து நிறுத்துவதற்கு ஏதாவது வரம்பு உண்டா? என்றும் பிரதமர் வினவினார்.
சபா ஆளுநர் பதவிக்கு மாநில முதல்வர் ஒருவரின் பெயரை மட்டுமே முன்மொழிந்தார். மேலும் இரண்டு மூன்று பெயர்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால், கடிதத்தில் ஒரு பெயர் மட்டுமே இருந்தது.
எனவே இவ்விவகாரத்தில் மாமன்னருக்கு நான் ஆலோசனை கூற முடியுமா? முடியும்……… மற்றவர்களின் பெயர்களையும் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ள முடியும், அவ்வாறு செய்வதாக இருந்தால் மாநில அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன்தான் நான் செய்ய முடியும் என்று பிரதமர் விளக்கினார்.