குவந்தான், டிச.21-
கனரக வாகனத்தை ஏற்றிய நிலையில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நீளமான டிரெய்லர் லோரியின் பின்புறம் மோதி, மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பரிதாபமாக மாண்டார்.
இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் பகாங், குவந்தான், ஜாலான் பிந்தாசான் குவாந்தன் சாலையில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் 34 வயது மோட்டார் சைக்கிளோட்டி நஸ்ருல் அய்மான் என்ற 34 வயதுடைய நபர், தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி, சம்பவ இடத்திலேயே மாண்டதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் வான் முகமட் ஸஹாரி வான் புசு தெரிவித்தார்