ஒழுங்கீன நடவடிக்கை : ஐந்து இடங்களில் 67 பேர் கைது

கோலாலம்பூர், டிச. 21-


தங்கள் வசம் உள்ள வெளிநாட்டுப் பெண்களின் கவர்ச்சிப்படங்களை அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து, நான்கு மணி நேரத்திற்கு 1,200 ரிங்கிட் பாலியல் சேவை என விளம்பரப்படுத்தி, ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் தலைநகரிலும், கெந்திங் ஹைலண்ட்ஸிலும் 5 இடங்களில் புக்கிட் அமான் போலீசார் ஏகக்காலத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இந்த 678 பேரும் பிடிபட்டனர்.

வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ் மற்றும் இந்தோனேசியா முதலிய நாடுகளின் இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி, கொள்ளை லாபம் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட கும்பல், வாடிக்கையாளர்களுடன் பேரம் பேசுவதற்கு அகப்பக்கத்தை தளமாக பயன்படுத்தி வந்துள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் சுஹாயிலி முகமட ஸைன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS