கோலாலம்பூர்,டிச. 21-
முன்னாள் பிரதமரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரை ஆதாரங்கள் அடிப்படையில் விடுதலை செய்து இருக்கும் நீதிமன்றத்தின் முடிவை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக்கொண்டார்.
ரோஸ்மாவிற்கு எதிராக சட்டவிரோதப் பணமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக 17 குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ரோஸ்மா விடுதலை குறித்து சில தரப்பினர் சர்ச்சை செய்த போதிலும் அது நீதிமன்ற தீர்ப்பாக இருப்பதால் அத்தகையை சர்ச்சை தேவையில்லாததாகும் என்று அம்னோ முன்னாள் உதவித் தலைவரான இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டார்.