மலேசியப் பிரஜைகளுக்கு விசா சலுகையை இந்தியா நீட்டிக்குமா?

கோலாலம்பூர், டிச.21-


இந்தியப் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசா விலக்களிப்பு சலுகையை மலேசியா, 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீடித்துள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.

அதேபோன்று மலேசியப் பிரஜைகளுக்கு இந்திய வழங்கியுள்ள விசா விலக்களிப்பு சலுகை, மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியப்பிரஜைகளுக்கு விசா விலக்களிப்பு சலுகையை மலேசிய அரசாங்கம் நீட்டித்திருப்பதைப் போல மலேசியார்களுக்கும் விசா விலக்களிப்பு சலுகையை இந்தியா மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மலேசிய இந்தியர் ஒருமைப்பாட்டு இயக்கத்தின் தலைவர் கே.பி. சாமி வலியுறுத்துகிறார்.

ஏற்கனவே, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியிலிருந்து 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்தியப் பிரஜைகளுக்கு மலேசியா வழங்கிய 30 நாள் இலவச சலுகையை அடிப்படையாக கொண்டே, இந்தியாவும் இவ்வாண்டு ஜுலை முதல் தேதியிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரை ஜுன் மாதம் 30 ஆம் தேதி வரை மலேசியர்களுக்கு விசா ஓராண்டு விலக்களிப்பு சலுகையை வழங்கியதாக கே.பி. சாமி சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவின் இந்த, இரட்டை நுழைவு இ- சுற்றுலா விசாவின் மூலம் மலேசியர்கள் விசா கட்டணமின்றி இந்தியா சென்று வருவதற்கு, அந்நாட்டு அரசாங்கம் வாய்ப்பு வழங்கியது. இவ்வாறு வழங்கப்பட்ட இந்த இ- சுற்றுலா விசா விலக்களிப்பு சலுகை, அடுத்த ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைவிருப்பதாக KPS டிரவல்ஸ் சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளராக கே.பி. சாமி விளக்கினார்.

இந்நிலையில் மலேசிய அரசாங்கம், இந்தியப் பிரஜைகளுக்கு வழங்கியுள்ள 30 நாட்களுக்குரிய விசா விலக்களிப்பு சலுகையை, வரும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை, மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக நேற்று அறிவித்துள்ளது.

இந்தியப் பிரஜைகளுக்கு விசா விலக்களிப்பு சலுகையை மலேசியா நீட்டித்து இருப்பது மூலம் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கும் மலேசியர்களுக்கான இந்தியாவின் இ- சுற்றலா விசா விலக்களிப்பு சலுகையை இந்திய அரசாங்கம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மஇகா முன்னாள் மத்திய செயலவை உறுப்பினராக கே.பி. சாமி வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS