இந்திய சமூகத்திற்கு வெறும் 130 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டதா? பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மறுப்பு

கோலாலம்பூர், டிச. 21-


இந்திய சமூகத்திற்கு தமது தலைமையிலான அரசாங்கம் வெறும் 130 மில்லியன் ரிங்கிட்டை மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வன்மையாக மறுத்துள்ளார்.

இந்த 130 மில்லியன் நிதி ஒதுக்கீட்டிற்கு அப்பாற்பட்ட நிலையில் தெக்குன் மற்றும் அமானா இக்தியார் மலேசியா போன்ற சிறப்புத்திட்டங்கள் வாயிலாக இந்திய சமுகத்திற்கு மேலும் பல திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.

இந்திய சமுதயாம் தேசிய நீரோடையின் வாயிலாக மேன்மைக் காணும் நோக்கில் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மூலமாக அவரின் அமைச்சின் கீழ் கூடுதலாக பல்வேறு பொருளியல் ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துமாறு அண்மையில் தாம் பணித்துள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.

நாட்டில் மக்களின் வறிய நிலையை துடைத்தொழிக்கும் முயற்சியிலும், மக்களுக்கு உதவும் திட்டத்திலும் இன ரீதியான கண்ணோட்டத்தை கொண்டு இருப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS