9 இலட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும்

டிச. 22-

புதிதாக நடப்புக்கு வந்த SSPA எனப்படும் பொது சேவை ஊதிய முறையின் கீழ் இறுதிச் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய விகிதங்களை சரிசெய்வது 9 இலட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும். இந்த அறிவிப்பு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமால் வெளியிடப்பட்டது. இந்த சரிசெய்தல் ஓய்வூதியதாரர்களின் கவலைகளைக் குறைக்கும் என்று அரசு – தனியார் துறை பணி ஓய்வு பெற்றவர்கள் சங்கமான Pejasma வின் தலைவர் Datuk Azih Muda கருத்துரைத்துள்ளார்.

4 முதல் 8 விழுக்காடு வரை ஓய்வூதியத்திற்கான மறு சீரமைப்பு இருக்கும். நிர்வாகப் பிரிவினருக்கு 8 விழுக்காடு உயர்வும், உயர் நிர்வாகத்திற்கு 4 விழுக்காடு உயர்வும் இருக்கும். 2012 இல் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் 8 விழுக்காடு உயர்வு அடிப்படையில் கணக்கிடப்படும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியதாரர்கள் கூடுதல் தொகை பெறுவார்கள். எடுத்துக் காட்டாக, முன்பு 2000 ரிங்கிட் பெற்றவர் இப்போது 2,200 ரிங்கிட் பெறுவார் என Datuk Azih Muda சுட்டிக் காட்டினார்

ஓய்வூதியதாரர்களின் நலனைக் காக்கும் முயற்சியில் PKKP எனப்படும் ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு வெகுமதி தொடர்ந்து வழங்கப்படும் என்று அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இந்த முடிவு கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS