டிச. 22-
பேரா மாநிலத்தின் Seri Iskandar பகுதியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு நபர்களை காவல் துறையினர் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை Perak Tengah மாவட்ட காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது என அதன் தலைவர் Superintenden Hafezul Helmi Hamzah தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களின் வயது 27 முதல் 35 வரை ஆகும். நேற்று இரவு 11.40 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று காலை 10.06 மணிக்கு Seri Iskandar காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் டிசம்பர் 26 வரை ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றவியல் சட்டத்தின் பிரிவு 394 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து மேலும் தகவல் தெரிந்தவர்கள் Perak Tengah காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வு பிரிவஈத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.