டிச. 22-
தாய்லாந்துக்குச் சுற்றுலா செல்லும் மலேசியர்களின் பாதுகாப்பை தாய்லாந்து அரசாங்கம் உறுதி செய்யும் என்று தாய்லாந்தின் நான்காவது இராணுவப் பிரிவின் தளபதி Leftenan Jeneral Paisan Nusang தெரிவித்துள்ளார். தெற்குப் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சாலைத் தடைகள் தீவிரப்படுத்தப்படும். தாய்லாந்து-மலேசியா எல்லைகளில் சட்டவிரோத பாதைகளிலும் இராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்.
மலேசியர்கள் தாய்லாந்தை முக்கிய சுற்றுலாத் தலமாகக் கருதுவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று Paisan Nusang கூறினார். அதே நேரத்தில், மலேசியர்கள் தங்கள் சுய பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பள்ளி விடுமுறை, பண்டிகை காலங்களில் கிளாந்தான் உட்பட மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் தாய்லாந்துக்குச் செல்வது வழக்கம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தாய்லாந்து அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.